Google Drive சேவைக்கு பதிலாக வருகிறது Drive File Stream

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பிரபல ஒன்லைன் கிளவுட் சேமிப்பு சேவகளுள் Google Drive சேவையும் ஒன்றாகும்.

இச் சேவையினை இவ் வருடம் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

advertisement

எனினும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதலே முழுமையாக செயலிழக்கச் செய்யப்படவுள்ளது.

இச் சேவையினை தற்போது இணையத்தளம் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு ஒக்டோபர் மாதம் முதல் சேவை நிறுத்தம் தொடர்பான அறிவிப்புக்கள் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இததேவேளை இதற்கு பதிலாக Drive File Stream எனும் மற்றுமொரு சேவை அறிமுகம் செய்யப்படும் எனவும் இதனை நேரடியாக கணினிகளில் இருந்தே பயன்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் கூகுள் ட்ரைவ்வினை போன்று தாமதங்களை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இருக்காது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்