இந்தியர்களின் உலகமே இதுதான்: வெளியான ஆய்வு முடிவு

Report Print Arbin Arbin in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகில் அதிக அளவில் ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்தும் 10 மிகப் பெரிய நாடுகளில் ஆப் ஆனி என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.

அதில், ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் முதல் ஐந்து இடங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஜப்பான் நாட்டினர் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் மேல் ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

இந்தியாவில், சுறுசுறுப்பான ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போனில் ஆப்ஸ் பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

போனை குறைந்த அளவில் பயன்படுத்துபவர்கள்கூட ஒருநாளைக்கு சராசரியாக 1.5 மணி நேரம் ஆப்ஸ் பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர்.

ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். மொபைல் ஷாப்பிங் ஆப்ஸ்களை மட்டும் சராசரியாக ஒரு மாதத்தில் 90 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள்.

நிதி சார்ந்த ஆப்ஸ்களை ஒரு மாதத்துக்கு இந்தியர்கள் 30 நிமிடங்களும், பிரேசில் நாட்டினர் 45 நிமிடங்களும், தென் கொரியா நாட்டினர் 60 நிமிடங்களும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் 20 நிமிடங்களும் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்