ஸிகா வைரஸ் தொடர்பில் வெளியான தகவல்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

சில மாதங்களுக்கு முன்னர் ஸிகா வைரஸ் ஆனது உலகின் பல நாடுகளை பரபரப்புக்குள் தள்ளியிருந்தது.

ஈடிஸ் வகை நுளம்பினால் பரப்பப்படும் இந்த வைரஸ் தொற்றினை லேசான காய்ச்சல், தோல் அழற்சி, இமைப்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி என்பவற்றினைக் கொண்டு அடையாளம் காண முடியும்.

இவை ஆரம்ப கட்ட அறிகுறியாக காணப்படுகின்ற அதேவேளை உயிரைக் கொல்லும் அளவிற்கு கொடூரமான நோயாகும்.

இந்நோயை குணப்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஸிகா வைரஸினை மூளைப்புற்று நோய்க்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் ஆனது வாசிங்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டிகோ பல்கலைக்கழகம் என்பன இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்