அங்க மாற்றீட்டு சிகிச்சைக்கு உதவ தயாராகும் பன்றிகள்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
106Shares
106Shares
lankasrimarket.com

மனிதர்களில் மேற்கொள்ளப்படும் அங்க மாற்றீட்டு அறுவைச் சிகிச்சைகளுக்கான அங்கங்களை பெறுவதற்கு பன்றிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளையே இவ்வாறு பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர் 37 பன்றிகளின் பரம்பரை அலகில் மறைந்திருந்த வைரஸ்கள் வெற்றிகரமாக விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே அங்க மாற்றீடு தொடர்பான ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களின் படி அமெரிக்காவில் 100,000 வரையானவர்களும், ஐக்கிய இராச்சியத்தில் 6,500 வரையானவர்களும் அங்க மாற்றீட்டு அறுவைச் சிகிச்சைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்