இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் என்னை கொன்றிருப்பார்: திடுக்கிடும் தகவலை கூறிய ராணுவ வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
192Shares
192Shares
lankasrimarket.com

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் தன்னை கொன்றிருப்பார் என முன்னாள் ராணுவ வீரர் விசாரணையில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், அன்றைய நாள் இரவு கிளப் ஒன்றிற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சென்றார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர் ரியான் ஹாலே, ரியான் அலி ஆகியோருக்கும் பென் ஸ்டோக்ஸிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகறாரில் ஸ்டோக்ஸ் அவர்களை கடுமையாக தாக்கினார்.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமிராவில் பதிவானது. அதனைத் தொடர்ந்து ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த திங்கட்கிழமை முதல் நடந்து வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகி, நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜராகி வருகிறார். விசாரணையில், இரவு 12.46 மணிக்கு கிளப்பில் இருந்து வெளியேறிய ஸ்டோக்ஸ், பிறகு மீண்டும் தனது நண்பர் ஹேல்ஸுடன் கிளப்பிற்கு சென்றுள்ளார்.

அப்போது கிளப் மூடப்பட்டதால் ஸ்டோக்ஸிற்கு உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. அப்போது அங்கிருந்த ரியான் ஹாலே, அலி ஆகியோரை ஸ்டோக்ஸ் கிண்டலாக பேசியதால் எழுந்த வாக்குவாதத்தில், அவர்களை ஸ்டோக்ஸ் கடுமையாக தாக்கியுள்ளார் என்பது தெரிய வந்தது.

பின்னர், இதுகுறித்து பொலிசாரிடம் ஹாலே கூறுகையில் ‘அந்த நேரத்தில் ஸ்டோக்ஸ் என்னை கொன்றாலும் கொன்றிப்பார். நான் ஒரு தந்தை. என்னை கொன்றாலும் கொன்றிருப்பார். எப்படி விட்டார் என்று தெரியவில்லை. தவறே செய்யாதவர்கள் மீது சிலர் இப்படி செய்வது அதிர்ச்சியாக இருந்தது’ என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஹாலே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘நான் செய்தது அனைத்தும் தற்காப்புக்காக தான். தாக்க வேண்டும் என்று செய்யவில்லை. சம்பவம் நடந்தபோது நான் குடிக்கவும் இல்லை’ என தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்