சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கையின் முன்னணி வீரர்? அவரே கூறிய தகவல்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
170Shares
170Shares
lankasrimarket.com

நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் இலங்கை பந்துவீச்சாளர் ரங்கனா ஹெரத் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹெரத் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்களை வீழ்த்தி ஹெரத் சாதனை படைத்துள்ளார்.

தற்போது 40 வயதாவதால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இது சரியான தருணம் என அவர் நினைக்கிறார்.

இது குறித்து பேசிய ஹெரத், இந்தாண்டு நடக்கவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் எனது கடைசி தொடராக இருக்கலாம்.

எல்லா கிரிக்கெட் வீரருக்கும் ஓய்வு பெற ஒரு நேரம் வரும், அந்த நேரம் எனக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின்னர் அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளரிடம் இது குறித்து பேச போவதாகவும் ஹெரத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்