இனத்தின் கடைசி ஆண்மகன் சூடானுக்கு ரோகித்சர்மா அளித்த பரிசு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
263Shares
263Shares
lankasrimarket.com

இங்கிலாந்து அணிக்கெதிரான இருபது ஓவர் போட்டியின்போது தான் அடித்த சதத்தினை, மறைந்த வெள்ளை காண்டாமிருகம் சூடானுக்கு பரிசளிப்பதாக ரோகித்சர்மா கூறியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற மூன்றாவது இருபது ஓவர் போட்டியின்போது, இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் இந்திய அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர் ரோகித்சர்மா, 5 சிக்ஸர் ,11 பவுண்டரிகள் என 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்திருந்தார். இதனையடுத்து ரோகித்சர்மாவே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான் அடித்த சதத்தினை, தன் இனத்தின் கடைசி ஆண் மகனும் என அழைக்கப்பட்ட அரியவகை வெள்ளை காண்டாமிருகமான சூடானுக்கு பரிசளிப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 1975-ல் சூடானிலுள்ள ஷாம்பே வேட்டை காப்பிடத்தில் இருந்து குட்டியாக பிடிக்கப்பட்ட வெள்ளை காண்டாமிருகம் கடந்த மார்ச் 20-ம் தேதியன்று உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்