கோப்பையை வெல்ல சொன்னார்! நாங்கள் வென்றோம்: ஐபிஎல் குறித்து டோனி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
215Shares
215Shares
lankasrimarket.com

சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட டோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் குறித்து பேசியுள்ளார்.

இறுதிப் போட்டி தருணத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நாங்கள் எப்படி எங்களை களத்தில் நடத்திக் கொண்டோம் என்பது பற்றி மிகவும் சாதரணமாகவே இருந்தோம்.

ஒவ்வொரு வீரரின் பங்கு மற்றும் பொறுப்புகள் தெளிவாகவே இருந்தது. ஆகவே ஏதாவது கூற வேண்டிய, ஆலோசனை வழங்க வேண்டிய தேவையிருந்தால்தான் வழங்க வேண்டும்.

சும்மா ஒரு அணியின் கேப்டன், பயிற்சியாளர் என்பதற்காக வீரர்களைக் கூட்டி எதாவது கூறியே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கூட்டம் 5 விநாடிகள் நடந்திருந்தால் பெரிது.

அணியின் பயிற்சியாளர் பிளெமிங் , போய் கோப்பையை வெல்லுங்கள் பாய்ஸ் என்றார், நாங்கள் வென்றோம் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்