ஐபிஎல் போட்டிகளில் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த லுங்கி நிகிடியின் தந்தை மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ளார்.

தனது அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி.

இவர், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். இதற்காக இந்தியா வந்திருந்தார் நிகிடி. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த லுங்கி நிகிடியின் தந்தை ஜெரோம் நிகிடி, சனிக்கிழமை திடீரென மரணமடைந்தார்.

இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த லுங்கி நிகிடி, உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைவர் கிறிஸ் நென்ஸானி கூறுகையில்,

‘ஜெரோம் நிகிடியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். லுங்கி நிகிடி, இந்த சின்ன வயதில் தந்தையை இழந்தது கடினமானது. ஜெரோம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்