மனைவியுடன் சேர்ந்து அழகாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொன்ன இலங்கை வீரர்: வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகம் முழுவதும் சித்தரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முக்கிய பிரபலங்கள் பலரும் பாரம்பரிய உடைகளான சேலை மற்றும் வேட்டி போன்றவைகளை அணிந்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரரான தினேஷ் சண்டிமால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில் வேட்டி போன்ற நீண்ட தளர்வான உடை அணிந்து மனைவியுடன் சேர்ந்து கும்பிட்டது போல் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்