விராட் கோஹ்லியின் புதிய டாட்டூ: வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

விராட் கோஹ்லி புதிதாக போட்டுக் கொண்ட டாட்டூ புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு, டாட்டூ எனும் பச்சை குத்திக் கொள்வது மிகவும் பிடித்தமான விடயமாகும்.

இந்நிலையில், மும்பை பாந்த்ரா நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்ற கோஹ்லி, அங்கு தனது உடலில் விதவிதமான டாட்டூக்களை வரைந்து கொண்டார்.

அவற்றில் சிவன் கைலாய மலையில் தவம் செய்யும் உருவம், அதன் பின்புலத்தில் மானஸ்ரோவர் மலை உள்ளது. அடுத்ததாக, தனது பெற்றோரின் பெயர்களை பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.

மற்றொரு டாட்டூவில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஜெர்சி எண்ணான ’18’-யை வரைந்துள்ளார். இவற்றைத் தவிர Golden Dragon, Scarpio, சாமுராய் வீரன் என 8 டாட்டூக்களை தன் உடல் முழுவதிலும் வரைந்துள்ளார் கோஹ்லி.

மேலும், தனது இடது தோள்பட்டையில் ஏற்கனவே வரைந்திருந்த ‘God eye' என்ற டாட்டூவைச் சுற்றி, மேலும் சில Design-களை கோஹ்லி வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Virat Kohli, Kaal Mokshya/Twitter

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்