அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன்: ரெய்னாவின் திக் திக் நிமிடங்கள்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
352Shares
352Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா எதிர்பாராமல் நடந்த கார் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணி வீரரான சுரேஷ் ரெய்னா, துலீப் டிராபி போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

நாளை கான்பூரில் நடக்கும் போட்டிக்காக நேற்று காசியாபாத்தில் இருந்து கான்பூருக்கு தனது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எட்டாவா என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது காரின் டயர் வெடித்து சிதறியது.

காலை 2 மணியளவில் விபத்து நடந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த வழியே சென்றவர்கள் பொலிசுக்கு அளித்த தகவலின் பேரில் மாற்றுக் கார் மூலம் கான்பூருக்கு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்