ஊக்கமருந்து விவகாரத்தால் முடிவுக்கு வந்த வீராங்கனையின் வாழ்க்கை

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய தடகள வீராங்கனைக்கு 8 வருடம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தடகள வீராங்கனை பிரியங்கா பன்வார்(29) 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருக்கிறார்,

advertisement

இவர், இரண்டு முறை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திக்கொண்டு போட்டியில் களமிறங்கியுள்ளார்.

இதையடுத்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.

விசாரணையில், பிரியங்காவின் உடலை சோதனை செய்ததில், அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்ததையடுத்து அவருக்கு 8 வருடங்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இருந்து தடைக்காலம் கணக்கிடப்படுவதால் அவரது விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்