இந்திய வீரருடன் மண்ணில் புரண்டு சண்டையிட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasri.com

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிரெட் லீ இந்திய வீரர்களுடன் மல்யுத்தம் செய்துள்ளார்.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கே.பி.எல் போட்டிகளின் வர்ணனையாளராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ உள்ளார்.

இந்நிலையில், மைசூரில் இருந்த மல்யுத்த மைதானத்துக்கு வந்த பிரெட் லீ அங்கிருந்த ஒரு வீரருடன் மல்யுத்தப் போட்டியில் ஈடுபட்டார்.

அப்போது மல்யுத்த மைதானத்தை தொட்டு வணங்கியபடி களத்தில் இறங்கியதுடன், வீரருடன் மைதானத்தில் விழுந்து புரண்டு தனது திறமையை வெளிக்காட்டினார்.

அதன் பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் பாரம்பரிய தங்கல் விளையாட்டை விளையாடியது மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்