கராத்தே போட்டியில் முல்லைத்தீவு இளைஞன் வெண்கலப்பதக்கம்

Report Print Thileepan Thileepan in ஏனைய விளையாட்டுக்கள்
250Shares
250Shares
lankasrimarket.com

43ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கராத்தே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட இளைஞன் வெண்கல பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.குமார் என்ற இளைஞரே வெண்கலப்பதக்கதை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவர் 84 - 75 நிறை பிரிவில் 7 - 4 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று தேசிய ரீதியிலான வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்.

விளையாட்டு துறை அமைச்சினால் நடத்தப்படும் 43வது தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான கராத்தே போட்டி நிகழ்வு கண்டி மாவட்டத்தில் திகன பிரதேசத்தில் இம் மாதம் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்