சச்சினுக்கு சிறுமி அனுப்பிய நெகிழ்ச்சி கடிதம்: சச்சின் கூறிய பதில் என்ன?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஆறு வயது சிறுமி தனக்கு அனுப்பிய கடிதத்துக்கு சச்சின் டெண்டுல்கர் நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை குறித்து சச்சின் - எ பில்லியன் டிரீம்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த ஆறு வயது சிறுமி தாரா சச்சினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், உங்கள் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தேன். உங்களின் சிறுவயது நாட்களை பார்த்து சிரித்தேன்.

எனினும், கடைசி போட்டியில் நீங்கள் விளையாடியது எனக்கு வருத்தம் தந்தது. உங்களை குடும்பத்துடன் நான் சந்திக்க விரும்புகிறேன் என எழுதியிருந்தார்.

சிறுமியின் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் டுவிட்டரில் சச்சின், ஹாய் தாரா எனக்கு கடிதம் எழுதியதற்கு நன்றி, திரைப்படத்தை நீ ரசித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்