பாலிவுட் நடிகையுடன் காதலில் விழுந்த இளம் கிரிக்கெட் வீரர்?

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
808Shares
808Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா ஆகிய இருவரின் டுவிட்டர் உரையாடல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையும், நடிகையுமான பரினீத்தி சோப்ரா டுவிட்டரில் சைக்கிள் படம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், என்னுடைய பார்ட்னருடன் அழகான பயணம் என்று குறிப்பிட்டிருந்த அவர், காற்றில் காதல் இருக்கிறது என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டுவிட் இந்திய கிரிக்கெட் அணியின் ஹர்திக் பாண்டியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. பரினீத்தி சோப்ராவின் டுவிட்டை கண்ட பாண்டியா, நான் கணிக்கவா, இது இரண்டாவது பாலிவுட், கிரிக்கெட் லிங்கா என்று டுவிட்டரில் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த பரினீத்தி, இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்றார். மேலும், புகைப்படத்திலேயே க்ளூ இருக்கிறது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், பாண்டியாவின் டுவிட்டுக்கு பதில் கொடுத்த பரினீத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், ஜியோமி செல்போன் விளம்பரத்திற்கு தான் அந்த டுவிட் என்று கூறியுள்ளார்.

இருவரும் டுவிட்டரில் பேசிக்கொண்டதை பார்த்த ரசிகர்கள், கோஹ்லி அனுஷ்கா சர்மா, ஜாகீர்ஹான் சகரிகா கார்கா ஆகியோரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மற்றும் பரினீத்தி சோப்ரா இருவரும் காதலிக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்