இந்தியா குறித்து சர்ச்சைக் கருத்து: வருத்தம் தெரிவித்தார் துரந்த்

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்
121Shares
121Shares
lankasrimarket.com

இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததற்காக தாம் வருந்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கெவின் துரந்த், இந்த பயணம் குறித்து அமெரிக்காவில் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், அறிவு மற்றும் அனுபவத்தில் இந்தியா 20 ஆண்டுகள் பின்தங்கியிருப்பதாக தெரிவித்தார்.

எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், வாகன நெருக்கடி என இந்தியாவில் இருப்பதாகவும், தகுதியே இல்லாத பலர் கூடைப்பந்தாட்ட விளையாட்டை கற்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தேவையற்ற விஷயங்களை தாம் பேசி விட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் துரந்த் தமது டுவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்