கிம்மிடம் இருந்து அறிவிப்பு வரும்: டிரம்ப்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares

வடகொரியாவில் உள்ள ஏவுதளங்களை அழிப்பது குறித்து இன்னும் சில தினங்களில் கிம் ஜாங் உன் அறிவிப்பை வெளியிடுவார் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்- டொனால்டு டிரம்ப் சந்தித்துக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தது.

அப்போது கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றாக அழிப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் வடகொரியா கையெழுத்திட்டது.

இதுகுறித்து டிரம்ப் கூறியதாக ஏபிசி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கொரியா பிராந்தியத்தை அணு ஆயுதமற்றதாக மாற்றுவேன் என கிம் ஜாங் உன் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம்.

நானும் கிம் ஜாங் உன்னிடம் சில பாதுகாப்பு உத்தரவாதங்களை அளித்தேன், அதைப்பற்றி தெளிவாக கூற இயலாது என தெரிவித்துள்ளார்.

மேலும் தென் கொரியாவில் அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது குறித்து விவாதிக்கவில்லை என்றும், மிகுந்த செலவின் காரணமாக போர் பயிற்சிகளை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்