கணவரின் தம்பியுடன் உறவு கொண்ட மனைவி: துரோகத்தால் துடித்து போன கணவன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares

பெண்ணொருவர் கணவரின் தம்பியுடன் பத்தாண்டுகளுக்கு முன்னர் உறவு கொண்ட நிலையில் துரோகத்தால் துடித்து போன கணவர் போதைக்கு அடிமையாகியுள்ளார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த விடயத்தை சம்மந்தப்பட்ட பெண் தற்போது வெளியுலகுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்நிலையில் இளைஞரின் தம்பி, பெண்ணுடன் நல்ல நட்பாகியுள்ளார்.

இதையடுத்து பெண்ணின் அறையை சுத்தம் செய்யும் வேலை இருந்த நிலையில் அதற்கு உடனிருந்து இளைஞரின் தம்பி உதவியுள்ளார்.

வேலை முடிந்த பின்னர் பெண்ணும், இளைஞரின் தம்பியும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் இருவரும் உறவு கொண்டுள்ளனர், இதையடுத்தே தான் பெரிய தவறு செய்து விட்டோம் என உணர்ந்த பெண், இது குறித்து தனது வருங்கால கணவரின் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெண்ணை மன்னித்ததாக கூறிய அவர் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் மனைவி தனக்கு செய்த துரோகத்தை மறக்காத கணவர் மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

இச்சம்பவம் நடந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் கணவர் போதை பழக்கத்திலிருந்து விடுபடாமல் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக பெண் கூறியுள்ளார்.

தான் செய்த தவறுக்கு பலமுறை மன்னிப்பு கேட்டும் கணவர் மன்னிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த நாடு குறித்த தகவல் தெரியவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்