திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகனை கடித்த விஷப்பாம்பு: மணமகள் எடுத்த முடிவு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
827Shares
827Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகனை விஷப்பாம்பு கடித்த நிலையில், மருத்துவமனையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ரிகார்டோ ஜபடா என்ற நபரும் மெலிசா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்த ஏற்பாடுகள் நடந்தது.

திருமணத்துக்கு முந்தைய இரவு, ரிகார்டோ தனது வீட்டருகில் இருந்த போது அங்கிருந்த விஷப்பாம்பு ஒன்று ரிகார்டோ கையில் கடித்துள்ளது.

இதையடுத்து வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

திருமண நேரத்தில் இப்படி ஆகிவிட்டதே என ரிகார்டோவும், மெலிசாவும் கவலைப்பட்டு கொண்டிருந்த போது திருமணத்தை தள்ளி வைத்து கொள்ளலாம் என ரிகார்டோ கூறியுள்ளார்.

ஆனால் மெலிசா ஒரு தைரியமான முடிவை எடுத்தார், அதன்படி மருத்துவமனை படுக்கையிலேயே தனது காதலரை கரம் பிடிக்க முடிவு செய்தார்.

இது குறித்து குடும்பத்தாரிடம் கூறப்பட்ட நிலையில் நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில் மருத்துவமனையிலேயே ரிகார்டோ - மெலிசா திருமணம் நடைபெற்றது.

இருவரும் மோதிரம் மாற்றி கொண்ட நிலையில் சுற்றியிருந்தவர்கள் ஆனந்த கண்ணீருடன் தம்பதியை வாழ்த்தினார்கள்.

மெலிசா கூறுகையில், மருத்துவமனையில் திருமணம் செய்து கொண்டதால் வருத்தமில்லை, வருங்காலத்தில் எங்கள் திருமண நிகழ்வு குறித்து கூற அற்புதமான விடயம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்