அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து காரோடு விழுந்த நபருக்கு ஏற்பட்ட கதி : வீடியோ

Report Print Athavan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் 30 அடி உயரத்திலிருந்து காரோடு கீழே விழுந்த நபர் உயிரிழந்தார்.

வெள்ளியன்று சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள யுக்ஸியு (Yuexiu) என்ற இடத்தில் சென் (Chen) எனும் 54 வயது நபர் பல அடுக்கு பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த தமது ஹோண்டா காரை பின்நோக்கி இயக்கினார்.

அப்போது தடுப்பை உடைத்துக்குக் கொண்டு 30 அடி உயரத்திலிருந்து கார் கீழே விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது காரில் இருந்த சென் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பத்தை விபத்தாக சீனா பொலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்