உகாண்டா நாட்டில் எமிரேட்ஸ் விமானத்தின் அவசர வாசல் வழியாக பணிப்பெண் ஒருவர் குதித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அமீரகத்தின் எமிரேட்ஸ் விமானம் ஒன்று உகாண்டாவில் இருந்து துபாய் செல்ல தயாராக நின்றுள்ளது.
அப்போது பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் வந்துகொண்டிருந்தனர்.
திடீரென்று குறித்த விமானத்தின் அவசர வாசல் வழியாக அந்த விமானத்தின் ஊழியர் ஒருவர் வெளியே குதித்துள்ளார்.
குதிக்கும் முன்னர் அவரிடம் ஒரு கண்ணாடி போத்தல் ஒன்றும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
விமானத்தில் இருந்து குதித்த அவர், அவரிடம் இருந்த கண்ணாடி போத்தலின் மீது விழுந்ததில் உடலில் காயம் ஏற்பட்டுள்ளது.
மட்டுமின்றி அவரது கால்களும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்ட அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
விமானத்தில் இருந்து குதித்த குறித்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றாரா அல்லது, அவர் குதித்ததன் காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.