உணவருந்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நாடு எது தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகில் பிரான்ஸ் மக்கள் நாள்தோறும் உணவருந்த அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆய்வில் உணவருந்த மிக குறைவான நேரமே எடுத்துக் கொள்ளும் நாடாக அமெரிக்கா உள்ளது.

உலகின் ஒவ்வொரு நாடுகளும் உணவருந்த எடுத்துக் கொள்ளும் நேரம் குறித்த ஆய்வு ஒன்றை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அதில் பிரான்ஸ் நாட்டு மக்கள் தினசரி 133 நிமிடங்களை உணவருந்த எடுத்துக் கொள்வதாக தெரிய வந்துள்ளது.

இதன் அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இங்குள்ள மக்கள் தினசரி 127 நிமிடங்கள் உணவருந்த எடுத்துக் கொள்கின்றனர்.

ஜேர்மானியர்கள் தினசரி 95 நிமிடங்கள் உணவருந்த ஒதுக்குகின்றனர். அதேபோன்று பிரித்தானியர்கள் சுமார் 79 நிமிடங்களை தினசரி உணவருந்த ஒதுக்குகின்றனர்.

கனேடியர்கள் 65 நிமிடங்களும், சீனர்கள் 100 நிமிடங்களும் உணவருந்த ஒதுக்குகின்றனர்.

ஸ்பெயின் நாட்டவர்கள் சுமார் 126 நிமிடங்களை தினசரி உணவருந்த ஒதுக்குகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள அமெரிக்கா இரவு உணவை 7 மணிக்கு முன்னரே முடித்துக் கொள்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவருந்த அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் நாடுகளின் பட்டியல்:

 • பிரான்ஸ் - 133
 • இத்தாலி - 127
 • ஸ்பெயின் - 126
 • தென் கொரியா - 105
 • சீனா - 100
 • ஜேர்மனி - 95
 • ஜப்பான் - 93
 • அவுஸ்திரேலியா - 89
 • இந்தியா - 84
 • பிரித்தானியா - 79
 • மெக்ஸிகோ - 76
 • ஸ்வீடன் - 74
 • தென் ஆப்பிரிக்கா - 72
 • கனடா - 65
 • அமெரிக்கா - 62

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்