முட்டிதள்ளிய காளைமாடு: அந்தரத்தில் பறந்த பெண்! அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
295Shares
295Shares
lankasrimarket.com

இந்தியாவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது காளை மாடு மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் காளை மாடு ஒன்று வந்து கொண்டிருந்தது.

முதலில் மெதுவாக நடந்து வந்த மாடு சாலையை கடந்த பின்னர் திடீரென வேகமாக நடக்க தொடங்கியது.

பின்னர் தனக்கு முன்னர் சாலையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணை மாடு முட்டி மோதியது.

இதையடுத்து அந்த பெண் அந்தரத்தில் சில அடி தூரங்கள் தூக்கி வீசப்பட்டார்.

இந்த அதிர்ச்சி காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ள நிலையில் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

மாடு முட்டியதில் காயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்