உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் 9 வயது சிறுமி: போராடி மீட்ட பொலிசார்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
953Shares
953Shares
lankasrimarket.com

பிரேசில் நாட்டில் 3 அடி ஆழத்தில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுமியை பொலிசாரும் பொதுமக்களும் போராடி மீட்டுள்ளனர்.

பிரேசிலின் Sao Paulo பகுதியில் சம்பவத்தன்று ராணுவ பொலிசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது அவர்களை அணுகிய ஒரு பெண் நடந்த சம்பவத்தை கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

சிறுமி ஒருவர் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், வந்து மீட்க வேண்டும் எனவும் அவர் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவயிடத்துக்கு விரைந்த பொலிசார், அப்பகுதி பொதுமக்களையும் உதவிக்கு அழைத்துள்ளனர்.

பின்னர் தங்கள் கைகளாலையே சிறுமி புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மண்ணை அப்புறப்படுத்தியுள்ளனர்.

எந்திரங்களை பயன்படுத்தினால் அது சிறுமியை காயப்படுத்தலாம் எனவும், உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என கருதியே பொலிசார் தங்கள் கைகளால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியை உயிருடன் மீட்டனர். இருப்பினும் அவர் சுவாசம் விட சிரமப்பட்டதாகவும், உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமி எவ்வாறு அந்த புதைக்குழியில் சிக்கினார் எனவும், திட்டமிட்டே செய்யப்பட்டதா எனவும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்