பிறந்த குழந்தையை சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை: அதிர்ச்சி காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

மத்திய ஆப்பிரிக்க நாடான காபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பிறந்த குழந்தையை பல மாதங்களாக சிறைப்பிடித்து வைத்திருந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபான் என்ற நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

ஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை 35 நாட்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் மருத்துவமனை கட்டணமாக ரூ.2.5 லட்சம் கட்டினால் தான் குழந்தையை தருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இவ்வளவு பெரிய தொகை இல்லாததால் அந்த தாய் அதிர்ச்சியடைந்தார்.

சோனியாவால் பணம் கட்ட முடியாததால், குழந்தையை தாயிடம் இருந்து மருத்துவமனை பிரித்து வைத்தது.

இதுகுறித்த செய்தி அந்நாட்டு ஊடகங்கள் மற்றும் இணையத்தில் கசிந்தபோது, சமூகவலைத்தள பயனாளிகள் அந்த தயாருக்காக பணம் வசூலித்துள்ளனர்.

பின்னர் ஒருவழியாக 5 மாதங்கள் கழித்து அன்னையிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் 5 மாதங்களாக அன்னையிடம் இருந்து குழந்தையை பிரித்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட மருத்துவமனையின் இயக்குனர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும் சோனியா ஓகோம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை பொலிசார் விடுதலை செய்தனர். இச்சம்பவம் காபான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்