20 அடி நீள பாம்பை அடித்து கொன்று ருசித்த மக்கள்: திருவிழாவாக கொண்டாட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
514Shares
514Shares
lankasrimarket.com

மலேசியாவில் உள்ள தீவு ஒன்றில் 20 அடி மலைப்பாம்பு ஒன்றையும் அதனுடன் இணை சேர்ந்த இன்னொரு பாம்பையும் வேட்டையாடி அங்குள்ள மக்கள் உணவாக்கியுள்ளனர்.

மலேசிய தீவான போர்னியோ மக்கள் தங்கள் வேட்டைக்கு சென்ற போது சரிந்து விழுந்திருந்த ஒரு மரத்தின் உள்ளே பாம்பின் சத்தம் போன்று கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த மரத்தை பிளந்து பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துள்ளனர்.

மலைப்பாம்புகளை பொதுவாக உணவாக கொள்ளும் அவர்களுக்கு 20 அடி நீள பாம்பொன்று சிக்கியது திருவிழா காலம் போன்றதாக அமைந்துள்ளது.

இதையடுத்து அதனைக் கொன்று பல பேர் ஒன்றிணைந்து வாகனத்தில் ஏற்றி தங்கள் கிராமத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

போர்னியோ தீவு மக்கள் பொதுவாக மலைப்பாம்புகளை நெருப்பில் இட்டு வாட்டி, காய்கறிகளுடன் வேகவைத்து அரிசி உனவுடன் சாப்பிடுவது வழக்கம்.

தற்போது சிக்கியிருக்கும் இந்த 20 அடி மலைப்பாம்பானது சில நாட்கள் உணவுக்கு போதுமானது என அங்குள்ள 60 வயது முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலைப்பாம்புடன் கிராமத்துக்கு சென்றவர்களை பெரும் ஆரவாரத்துடன் மக்கள் வரவேற்றுள்ளனர். மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடும்ப உறுப்பினர்களை கணக்கில் கொண்டு தேவைக்கும் அதிகமான அளவு பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதுவரை குறித்த பகுதியில் சிக்கியுள்ள மலைப்பாம்பை விட இது 6 அடி நீளம் குறைவானது என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்