முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது அவசியமில்லை: சவுதி மதகுரு

Report Print Athavan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியாவின் முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் இனி சவுதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் பர்தா அணியத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

எளிமையான உடைகளை அணியவேண்டும் என்பதற்காக பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனும் அர்த்தம் இல்லை என்று கூறியுள்ள அவர் சவுதியின் மூத்த அறிஞர்கள் சபையின் உறுப்பினராகவும் உள்ளார்.

சவுதி தனது சமூகத்ததை நவீனமாக்கவும், பெண்கள் சம்பந்தமான இறுக்கமான சட்டங்களை தளர்த்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ள இந்த சூழலில் மூத்த மத ஆறிஞர் ஒருவர் இவ்வாறாக கூறி உள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய மதத்தின் மீது பற்று கொண்ட 90 சதவீத முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதில்லை. எனவே நாம் சவுதி பெண்களையும் ஃபர்தா அணியக் கோரி கட்டாயப்படுத்துவது தவறு என்கிறார் ஷேக் முட்லாக்

இஸ்லாமிய அறிஞர்களிடமிருந்து இது போன்ற குரல் வருவது இதுதான் முதல்முறையாகவும் முற்போக்காகவும் உள்ளது. இது எதிர்காலத்தில் சவுதியில் சட்டமாக மாறலாம் எனவும் கருதப்படுகிறது.

ஆயினும் ஷேக்கின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் மக்கள் எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இருப்பினும் சவுதியை நவீனமாக்க அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதற்காக விஷன் 2030 திட்டத்தை வடிவமைத்து செயல்படுத்தி வரும் அவர் சவுதி பெண்கள் தொடர்பான இறுக்கமான பல சட்டங்களை தளர்த்தவும் உறுதி அளித்துள்ளார்.

பெண்களுக்கு எதிரான பல தடைகள் சவுதி மெல்ல மெல்ல தளர்த்தினாலும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், வெளிநாட்டுப் பயணம், திருமணம், வங்கிக் கணக்கு தொடங்குதல், வியாபாரம் தொடங்குதல் ஆகியவற்றை சவுதியில் பெண்கள், ஆண்களின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்