ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் தென் கொரியாவில் நிலநடுக்கம்

Report Print Athavan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் தென் கொரியாவில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் தென்கொரியாவின் பியோங்சங் நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பியோங்சங் நகரில் இருந்து 80 கி.மீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது .

மிதமான நிலநடுக்கம் என்பதால் எந்த சேதமும் ஏற்படவில்லை. எனினும், நில நடுக்கம் காரணமாக தென் கொரிய மக்கள் பீதியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பியோங்சங் நகரில் எவ்வித நில அதிர்வும் உணரப்படவில்லை என ஒலிம்பிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்