வாடிக்கையாளரை தேடிச் சென்று தாக்கிய நிறுவன உரிமையாளர்: அதிர வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
275Shares
275Shares
lankasrimarket.com

சீனாவில் தமது நிறுவன பொருட்களுக்கு மோசமான விமர்சனம் பதிவு செய்த வாடிக்கையாளர் ஒருவரை நிறுவன உரிமையாளர் ஒருவர் தேடிச் சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் Zhang என்பவர்.

இவரது நிறுவனத்தில் இருந்து பொருள் ஒன்றை வாங்க பதிவு செய்த Xiao Li என்ற இளம்பெண், குறிப்பிட்ட நாட்களுக்குள் தமது பொருள் வந்து சேராததை அடுத்து அந்த நிறுவனத்தின் இணைய பக்கத்தில் மோசமான விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த குறித்த நிறுவன உரிமையாளர் Zhang 500 மைலகள் பயணம் செய்து தமது வாடிக்கையாளரை தேட்டிப்பிடித்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

கண்காணிப்பு கமெராக்களில் பதிவான இந்த கொடூர காட்சிகள் தற்போது சீனா சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தமது நிறுவனத்தின் மீது மோசமான விமர்சனம் செய்த வாடிக்கையாளருக்கு பாடம் புகட்டவே தாம் 500 மைல்கள் பயணம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்