வடகொரியாவில் இருந்து தப்பிய இராணுவ வீரர்: உடைந்து ஓட்ட வைக்க முடியாத ஜாடி போல் இருந்ததாக மருத்துவர் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

வடகொரியாவில் இருந்து தப்பி வந்த இராணுவ வீரர் உடைந்து ஒட்டவைக்க முடியாத ஜாடி போல இருந்ததாக தென்கொரிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வடகொரியா இராணுவ வீரர் ஹோ சாங் தனது நாட்டில் இருந்து தப்பித்து தென் கொரியாவுக்கு சென்றபோது தனது சக வீரர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

இதில், 40 குண்டுகள் அவரது உடலை துளைத்தன, இருப்பினும் எல்லையை கடந்து தென்கொரியாவுக்கு நுழைந்த அவரை, தென்கொரியா இராணுவ வீரர்கள் காப்பாற்றி ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த தென்கொரிய மருத்துவர் லீ குக் ஜாங் கூறுகையில், எந்த நேரத்திலும் உயிரிழந்துவிடுவதைப் போல இருந்த ஹோ ச்சாங்கின் உடலில் இருந்த குண்டுகளையும், வெள்ளை நிறப் புழுக்களையும் அகற்ற 6 மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை செய்ததாகவும், அவர் பார்ப்பதற்கு உடைந்து ஒட்டவைக்க முடியாத ஜாடி போல இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இறந்துவிடுவார் என்று அஞ்சப்பட்ட நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்