கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணியும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும்: வழக்கறிஞரின் பேச்சால் சர்ச்சை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஃபேஷன் என்ற பெயரில் கிழிக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்து நடக்கும் பெண்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என பேசிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் வழக்கறிஞர் ஒருவர் ஊடக விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வழக்கறிஞர் ஒருவர், சொந்த மகளாக இருந்தாலும் சரி, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து தெருவில் நடமாடினால் அவர்கள் கற்பழிக்கப்பட வேண்டும் என்றார்.

மட்டுமின்றி குறித்த செயலானது தேசிய கடமை எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Nabih al-Wahsh என்ற அந்த வழக்கறிஞரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது

ஆனாலும் தமது கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை என தெரிவித்த அவர், இன்னொரு ஊடகத்திலும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த நீதிமன்றம், பெண்களை மரியாதையுடன் நடத்தும் நாட்டில் இதுபோன்ற பேச்சுக்கு இடம் இல்லை எனவும் கூறி அவருக்கு 20,000 எகிப்திய பவுண்ட்ஸ் அபராதமும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்