ஜிம்பாப்வே குழப்பத்திற்கு பின்னணியில் இந்த நாட்டின் சதியா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
270Shares
270Shares
lankasrimarket.com

ஜிம்பாப்வேயில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பத்திற்குப் பின்னணியில் சீனா இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே ராணுவத் தளபதி சிவேங்கா, அங்கிருந்து திரும்பிய சில நாட்களில் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நீண்ட 37 ஆண்டு கால ராபர்ட் முகாபேவின் ஆட்சியை அகற்றுவதற்கு சீனா மறைமுகமாக ஒத்துழைப்பு அளித்திருக்கலாம் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

1970களில் பிரித்தானியாவுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் முகாபே ஈடுபட்டிருந்தபோது, சீனா அவருக்கு ஆயுதங்களை வழங்கி வந்துள்ளது.

முகாபே நாட்டின் தலைவராகப் பொறுப்புக்கு வந்த பின்னரும், சீனாவின் உதவி தொடர்ந்து வந்தது.

இருப்பினும் தற்போதைய அரசியல் குழப்பத்தில், சீனாவுக்கு எந்த அளவுக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்