தொப்புள் கொடியுடன் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

தொப்புள் கொடியுடன் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று சாலை ஓரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை கைவிட்ட பெற்றோரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிறந்து சில மணி நேரமேயான பச்சிளம் குழந்தை ஒன்றை செய்தி தாள்களில் பொதிந்த நிலையில் தாய்லாந்தின் Phra Phutthabat மாவட்டத்தில் உள்ள சாலை ஓரத்தில் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையின் பெற்றோரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மட்டுமின்றி குழந்தை கண்டெடுக்கப்பட்ட சாலையின் அருகாமையில் இருக்கும் கண்காணிப்பு கமெராக்களையும் பொலிசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

குழந்தையின் தாயாருக்கு குடும்பத்தில் ஏற்பட்ட ஏதேனும் பிரச்னை காரணமாக தமது குழந்தையை கைவிட முடிவு செய்திருக்கலாம் என பொலிசார் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்