சடலத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றி! மருத்துவர் சாதனை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

உலகிலேயே முதன்முறையாக சடலத்துக்கு நடத்தப்பட்ட தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக இத்தாலியை சேர்ந்த மருத்துவர் அறிவித்துள்ளார்.

இத்தாலி மருத்துவர் செர்ஜியோ கனோவெரா, ரஷியாவைச் சேர்ந்த வெலேரி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

இதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர், தற்போது ஒரு சடலத்திற்கு வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளார்.

செர்ஜியோ, தனது குழுவினருடன் சேர்ந்து சுமார் 18 மணிநேரத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையில், தண்டுவடம், நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் அனைத்தும் அதி நவீன தொழில் நுட்பத்துடன் தலையில் பொருத்தப்பட்டது.

இதே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி உயிருடன் வாழும் மனிதர்களுக்கும், தலைமாற்று அறுவை சிகிச்சையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்