இந்த நாட்டுக்கு நான் தான் அரசன்: உலக அளவில் வைரலான இளைஞரின் செயல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

எகிப்து - சூடான் இடையே, 800 சதுர மைல் இருக்கும் பாலைவன பகுதிக்கு இந்தியர் ஒருவர் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டது உலக அளவில் வைரலாகியுள்ளது.

எகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் 800 சதுர மைல் இருக்கும் வறண்ட பாலைவனப் பகுதியான Peer devil பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை.

ஆதரவற்று கிடக்கும் இந்த பகுதியில் மனிதர்களும் வசிப்பதில்லை, இந்நிலையில் இந்தியாவின் இந்தூரை சேர்ந்த தீக்ஷித் என்ற இளைஞர், இதனை தற்போது சொந்தம் கொண்டாடியுள்ளார்.

இது எனது நாடு என்றும், இன்று முதல் நான் இந்நாட்டின் அரசன் ஆவேன். இந்த பகுதிக்கு ’கிங்டம் ஆஃப் திக்‌ஷித்’ என்று பெயரிட்டுள்ளேன் என்று தீக்ஷித் தனது பேஸ்பேக்கில் தெரிவித்துள்ளார்.

மேலும், எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் சுமார் 6 மணிநேரம் பயணம் செய்து இந்த பகுதிக்குச் சென்றேன்.

பாலைவனத்தில் அங்கு, விதைகள் தூவி, அதற்குத் தண்ணீர் அளித்தேன், தற்போது கொடி ஒன்றையும் உருவாக்கியுள்ளேன்.

இங்கு விதைக்கப்பட்ட விதை காரணமாக இது எனது நாடு ஆகும். அப்படி யாருக்காவது இந்த நாடு கிடைக்க வேண்டும் என்றால், போர் செய்து எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் அளிக்க ஐ.நா-வுக்கு என தனியாக சில வழிமுறைகள் உள்ளது. அப்படியிருக்கையில் இந்த வாலிபரின் செயல் உலக அளவில் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்