ஜிம்பாப்வேயில் ராணுவ புரட்சி? தலைநகரை சுற்றி வளைத்த ராணுவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
472Shares
472Shares
lankasrimarket.com

ஜிம்பாப்வே நாட்டில் முகாபே அரசை கவிழ்க்கும் நோக்கில் ராணுவம் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என ராணுவப் தலைமை அதிகாரி அறிவித்துள்ள நிலையில் தலைநகரை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

தலைநகர் ஹராரேவை முற்றுகையிடும் முன்னர் ஜனாதிபதி ராபர்ட் முகாபேயின் பாதுகாப்பு அதிகாரிகல் முகாமுக்கு ராணுவ டாங்கிகள் விரைந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக தகவல்களை தெரிவிக்க மறுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டின் துணை ஜனாதிபதியை வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஆளும் கட்சியின் உட்கட்சி பூசல்கள் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என ராணுவ தளபதி கோரிக்கை விடுத்திருந்தார்.

கடந்த 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டின் ஜனாதிபதியாக ராபர்ட் முகாபே இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆளும் கட்சியில் முகாபேயின் மனைவிக்கு செல்வாக்கு அதிகரித்து வருவது நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

மட்டுமின்றி நாட்டில் நிலவும் கடுமையான பணவீக்கத்தால் இறக்குமதி பெருமளவு பாதித்துள்ளது.

இந்த நிலையில் நாட்டின் நெருக்கடி நிலையை சமாளிக்க முகாபே பதவி விலகுவது பொருத்தமாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் திடீரென்று ராணுவம் தலைநகரை முற்றுகையிட்டுள்ளது ராணுவ புரட்சிக்கான ஒத்திகையா என்பது மிகவிரைவில் தெரிய வரும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்