பெண்களை வற்புறுத்தி ஆபாச நடனம் ஆட வைத்த மருத்துவமனை: விசாரணையில் நிர்வாகம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
733Shares
733Shares
lankasrimarket.com

தென்கொரியாவில் உள்ள மருத்துவனை ஒன்றில் செவிலியர்களை வற்புறுத்தி ஆபாச நடனம் ஆடவைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவின் Chuncheon பகுதியில் உள்ள Hallym University's Sacred Heart மருத்துவமனை சார்பில் கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள், மேடையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனம் ஆடியுள்ளனர். இதில் அவர்களை வற்புறுத்தி நடனம் ஆட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து கடந்த திங்கட்கிழமை தி கொரியன் செவிலியர் சங்கம் சார்பில் Hallym University's Sacred Heart மருத்துவமனை விசாரணைக்கு அழைக்கபப்ட்டுள்ளது.

அதில் செவிலியர்களை இவர்கள் தங்களுடைய நிர்வாகத்தின் பயனுக்காக ஆபசமாக நடனம் ஆட வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோவையும் செவிலியர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடைபெறும் எனவும் சம்பவம் நிரூபிக்கப்படுமானால் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்