200 பேரை பலிவாங்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிர் பிழைக்க பதறி அடித்து ஓடும் மக்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஈராக்கில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் போது, காபி ஷாப்பில் இருந்த மக்கள் உயிர் பிழைக்க ஓடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக்கில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ரிக்டர் அளவுகோலில் 7.3-ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியில் மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தின் போது, இராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்த காபி ஷாப்பில் பொதுமக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள், பதறி அடித்து ஓடிய சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதே போன்று வீடுகள் மற்றும் உணவகங்களில் நிலநடுக்கத்தின் போது, பேன்கள் மற்றும் விளக்குகள் போன்றவை ஊஞ்சலாடிய வீடியோவும் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்