சூடுபிடிக்கும் வடகொரிய ஜனாதிபதி அண்ணன் கொலை வழக்கு: மரண தண்டனையா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரரான கிம் ஜாங் நாம் வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் அண்ணன் கிம் ஜாங் நம் கடந்த பிப்ரவரி 13-ம் திகதி மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்த போது கொலை செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையில், இரண்டு இளம்பெண்கள் விஎக்ஸ் நரம்பு ரசாயனத்தை அவருடைய முகத்தில் பூசிக் கொன்றது தெரியவந்தது.

அந்த பெண்கள் இந்தோனேஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா, வியட்நாமை சேர்ந்த டோன் தி ஹீயோங் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறும் பெண்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி எனக்கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும் கொலை நடந்த அன்று மலேசியாவிலிருந்து வடகொரியாவுக்கு சென்ற நால்வரும் குற்றவாளிகள் எனவும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இவர்களை கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு பொலிசார் அழைத்து வந்தனர்.

குண்டு துளைக்காத ஆடையை அவர்கள் அணிந்திருந்ததுடன் பொலிசார் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்கள்.

இதன்போது வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் உடனிருந்தனர், கிம் தாக்கப்பட்டதாக தோன்றுகின்ற சோதனை அறைக்கும், அவர் மருத்துவ உதவி கோரிய மருத்துவ மையத்திற்கும் இந்த பெண்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்களது குற்றம் உறுதி செய்யப்பட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்