அமெரிக்கா உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும்: வடகொரியா

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com
advertisement

அமெரிக்கா நியாயமாக செயல்படவில்லை எனில், உலகநாடுகள் முன் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்படும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்று வடகொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரி யாங் ஹோ கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ஐக்கிய நாடுகள் சபையில் வடகொரியாவுக்கு எதிரான கருத்துகள், பொருளாதார தடைகள் விதித்து போருக்கான சந்தர்பத்தை டிரம்ப் தான் உருவாக்கினார். அதுமட்டுமின்றி தங்கள் நாட்டு ஜனாதிபதி கிம்முடன் போருக்கான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்.

இதனால் கிம் அமெரிக்கா நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றால் தங்கள் ஆயுத பலத்தால், அமெரிக்கா உலகநாடுகள் முன்னிலையில் தலைகுனியும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் என்பதை குறிப்பிட்டார்.

சமீபத்தில் டிரம்ப் வடகொரியா விவகாரத்தில் புயலுக்கு முன் அமைதி இருக்கும் என்றும் அந்நாட்டுடனான விவகாரத்தை இதற்கு முன்னர் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகள் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்