உணவில்லாமல் பூனையை உரித்து சாப்பிட்ட பெண்: வைரலாகும் வீடியோ

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

வெனிசுலா நாட்டில் உணவு இல்லாத காரணத்தினால் பெண் ஒருவர் பூனையை உரித்து சாப்பிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெனிசுலா நாட்டில் கடும் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் வீடு, உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

advertisement

மத்திய வெனிசுலாவில் உள்ள Rio Chico நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் வெளியான வீடியோ ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலையில் அமர்ந்துள்ள பெண் ஒருவர் இறந்த பூனையை தனக்கு முன்னால் கிடத்துகிறார்.

வீடியோவை காண

பின்னர், பூனையின் தோலை கைகளால் உரித்து இறைச்சியை துண்டாக பிய்த்து எடுக்கிறார்.

இக்காட்சியை சிலர் வீடியோ எடுப்பதை கண்டுக்கொள்ளாத அவர் இறைச்சி துண்டை அப்படியே வாயில் போட்டு சாப்பிடுகிறார்.

பெண்ணின் இச்செயல் அங்கு கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆளும் சோசியலிஸ்ட் கட்சியை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்