களமிறங்கியது பின் லேடனை தீர்த்துக்கட்டிய சிறப்புப்படை: சிக்கலில் வடகொரியா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனை தீர்த்துக்கட்டிய அமெரிக்க சிறப்புப்படையினரால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் கொல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரிய ஆறாவதாக அணுஆயுத சோதனை மேற்கொண்ட அடுத்த நாளில் குறித்த சிறப்புப்படையானது நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

advertisement

Seal Team Six எனப்படும் இந்த அதிரடிப்படையானது உலகில் ஆபத்தானதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டுள்ளது.

மேலும் Seal Team Six சிறப்புப்படையுடன் தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரகம் இணைந்து செயல்படும் என தெரிய வந்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இதனை தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தென் கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் முதல் திகதிக்கு முன்னதாக அமெரிக்க தென் கொரிய நாடுகள் இணைந்து வடகொரிய தலைவரை படுகொலை செய்யும் சிறப்பு குழு ஒன்றை தெரிவு செய்வார்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்