பிரபல செய்திதாள் நிறுவனத்திற்கு 100 கோடி வரி விதித்த அரசு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
122Shares
122Shares
lankasrimarket.com

கம்போடியா நாட்டில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சுமார் 100 கோடி வரி விதிக்கப்பட்டதை தொடர்ந்து அந்நிறுவனம் தனது பணியை நிறுத்திவிடுவதாக அறிவித்துள்ளது.

ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியா நாட்டில் Cambodia Daily என்ற முன்னணி செய்திதாள் நிறுவனம் தொடர்ச்சியாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.

செய்தி நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், அதற்கு 6.3 மில்லியன் டொலர்(96,13,80,000 இலங்கை ரூபாய்) வரியை அரசு விதித்துள்ளது.

‘குறிப்பிட்ட வரியை செய்திதாள் நிறுவனம் செலுத்த தவறினால் அதன் நிறுவனத்தை மூடி விட வேண்டும்’ எனவும் அரசு மிரட்டல் விடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து வரியை செலுத்த முடியாது எனவும், தனது நிறுவனத்தை மூடிவிடுவதாக Cambodia Daily அதிரடியாக அறிவித்துள்ளது.

செய்திதாள் நிறுவனங்களை பழிவாங்க அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக Cambodia Daily கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Cambodia Daily இன்றுடன் தனது நிறுவனத்தை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் நிலையில் நேற்று கம்போடியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான Kem Sokha என்பவரை பொலிசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்