ஐ.எஸ் தீவிரவாதிக்கு மரண தண்டனை: ஈராக் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஈராக் சண்டையின் போது அந்நாட்டு அரசிடம் சிக்கிய ஐ.எஸ் தீவிரவாதிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரில் நடந்த சண்டையின் போது சிக்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்படுகிறது.

அதுபோல அப்துல்லா உசேன் என்ற நபர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டை போட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு மொசூல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அப்துல்லா மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிபதிகள் கூறுகையில், 2005-ம் ஆண்டு இயற்றப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டுள்ள அப்துல்லா உசேனை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுகிறோம் என கூறியுள்ளனர்.

மொசூலில் பிடிபட்ட மற்ற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்