ஹைட்ரஜன் குண்டு சோதனை வெற்றி: வடகொரியாவின் அறிவிப்பால் பதற்றம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1367Shares
1367Shares
lankasrimarket.com

பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றின் மீது ஏற்றிச் செல்லக்கூடிய அணுஆயுதம் ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.

குறித்த சோதனையால் வடகொரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது வடகொரியாவின் ஆறாவது மிகப்பெரும் அணு குண்டு சோதனையாகும். இதனால் ஏற்பட்ட நிலநடுக்கமானது அணு குண்டு சோதனை மேற்கொண்ட பகுதியில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கணடனம் தெரிவித்துள்ளதுடன் தங்கள் நாட்டு ராணுவத்தினரை உஷார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணுஆயுத சோதனை பகுதியில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் உடனடியாக தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை தென் கொரியா கூட்டியுள்ளது.

சீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு இந்த நிலநடுக்கத்தை சந்தேகிக்கப்படும் அணுஆயத வெடிப்பு என்று கூறியுள்ளது.

புதிய ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் ஆய்வு செய்வது போன்ற படங்களை அந்நாட்டின் அரசு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள சில மணி நேரங்களில், இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மிகவும் நவீனமான மற்றும் சக்திவாய்ந்த அணுஆயுதமொன்றை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மீது ஏற்றிச் செல்லமுடியும் என்றும் வட கொரியா தெரிவித்திருந்தது.

ஆனால், இந்த கூற்றுகளை எந்த அமைப்புகளும் இதுவரை உறுதிசெய்யவில்லை. மட்டுமின்றி சமீப காலங்களில் பல ஏவுகணை சோதனைகளை வட கொரியா மேற்கொண்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்