சிங்கப்பூரில் சிறை தண்டனை அனுபவித்தும் தமிழர் செய்த செயல்: மீண்டும் 6 மாத தண்டனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்
391Shares
391Shares
lankasrimarket.com

சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழருக்கு 6 மாதம் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழரான ராமசாமி சுகுமார்(59), சிங்கப்பூரில் வசித்து வருகிறார். அப்போது வழிப்பறி வழக்கில் சிக்கிய இவருக்கு அது தொடர்பாக 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தண்டனை முடிந்து வந்த நிலையில் அவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த மே மாதம் 30-ஆம் திகதி புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடத்தில் நின்று ராமசாமி சுகுமார், பீர் குடித்துக்கொண்டும், சிகரெட் புகைத்துக்கொண்டும் இருந்துள்ளார்.

இதனால் இது தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு தேசிய சுற்றுச்சூழல் முகமை சம்மன் அனுப்பியுள்ளது.

அப்போது ஆஜரான அவர் சுற்றுச்சூழல் முகமை அதிகாரியை தமிழில் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அடித்தும் உதைத்துள்ளார்.

தாக்குதலுக்குள்ளான அந்த அதிகாரி, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளை உதவிக்கு அழைத்ததால், அவர் வந்து கூறியும் ராமசாமி கேட்கவில்லை, மாறாக பொலிஸ் அதிகாரியான கிறிஸ்டியன் டான் என்பவரை அடித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹர்ஜித் கவுர், குடிபோதையில் தன் கட்சிக்காரர் அப்படி நடந்து கொண்டதாக கூறி, கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டார்.

இருப்பினும் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்