இறைச்சி கூடங்களில் சிசிடிவி கமெரா பொறுத்த அரசு உத்தரவு

Report Print Peterson Peterson in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களிலும் கண்காணிப்பு கமெரா பொறுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் விலங்குகள் மிகவும் சித்ரவதைகளுக்கு உள்ளாவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்துள்ளனர்.

இறைச்சி கூடங்களில் விலங்குகளை வெட்டும்போது சித்ரவதை செய்யப்படுவதாகவும் புகார் வந்துள்ளன.

மேலும், இறைச்சி கூடங்களில் பராமரிக்கப்படும் விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளனவா? தரமான உணவுகள் அளிக்கப்படுகின்றனவா என விலங்குகள் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

இப்புகார்களை ஏற்றுக்கொண்ட இங்கிலாந்து அரசு இன்று அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இங்கிலாந்து முழுவதும் உள்ள இறைச்சி கூடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொறுத்துவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இறைச்சி கூடங்களில் கமெராக்கள் பொறுத்தப்படுவதால் விலங்குகளுக்கு எதிரான சித்ரவதைகள் தடுக்க முடியும் எனவும், இங்கிலாந்து மட்டுமின்றி பிற நாடுகளுக்கு தரமான இறைச்சியை அனுப்ப முடியும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நாடு முழுவதும் உள்ள இறைச்சி கூடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொறுத்தப்பட வேண்டும் என முதல் முதல்லாக இங்கிலாந்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்