சீன கடவுளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள்

Report Print Vethu Vethu in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தோனேசியாவின் துபான் நகரில் ஒரு கோவில் வளாகத்தில் சீனக் கடவுளின் 100 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளதற்கு அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தில் துபான் நகரில் சீனர்களின் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஏற்கெனவே இருக்கும் கடவுளர் சிலைகள் போகப் புதிதாக 100 அடி உயரத்தில் குவான் யு என்கிற கடவுளின் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

டிராகன், பாம்பு ஆகியவற்றுடன் வாள், அரிவாள் ஆகிய ஆயுதங்களையும் ஏந்தியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப்பெரிய சிலைக்கு அப்பகுதி முஸ்லிம்களும் தேசியவாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால் சிலை நிறுவப்பட்டுள்ள கோவிலைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வாழும் நாடு இந்தோனேசியா ஆகும்.

மதச்சார்பற்ற நாடான இந்தோனேசியாவில் அனைத்து மதத்தினருக்கும் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அண்மைக்காலமாக ஒரு சில மதத்தினர் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்